சன்னதியான் சிற்பாலயம்

சன்னதியான் சிற்பாலயம்

அம்பலவாணர் வீதி, உடுவில், சுன்னாகம், யாழ்ப்பாணம்.

வடிவேல் சிறிதரன் ஆகிய நான் எனது ஆரம்ப சிற்பக்கலையினை அராலியூர் ஸ்தபதி சி. அமரசிங்கம் அவர்களிடம் நன்றாக பயின்று அதன்பின்னர் இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு சன்னதியான் சிற்பாலயம் எனும் பெயரில் சிற்பாலயத்தினை உருவாக்கி முதல் கன்னி வாகனமாக எலி வாகனத்தினையும் மற்றும் சூரன் வாகனத்தினையும் எம்மால் திறன்பட செய்து சங்குவேலி வேட்டுக்கட்டைய் பிள்ளையார் கோவிலுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு பல கோவில்களுக்கு பல்வேறு விதமான கோவில் வாகனங்கள் எம்மால் செய்து கையளித்துக் கொண்டு இருக்கின்ற சமயத்தில் முதல் கன்னித்தேரினை உடுவிலில் அமையப்பெற்றுள்ள சிவன்ஞானப்பிள்ளையார் கோவிலுக்கு முதலாவது சித்திரத்தேரினை எம்மால் திறன்பட செய்து கையளித்துள்ளளோம். ஜேர்மன் நாட்டுக்குப் புலம்பெயர்ந்துள்ள  எம் தமிழ் மக்களின் வேண்டுதலுக்கு இனங்க பிள்ளையார் கோவிலுக்குரிய சித்திரத்தேரினை செய்து கையளித்து அவர்களின் பாராட்டினையும் பெற்றுள்ளோம். 

அதன்பிறகு உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலுக்கு உரிய சித்திரமஞ்சத்தினை எம்மால் செய்து கையளித்துள்ளளோம். சுவிஸ் நாட்டில் உள்ள தமிழ் மக்களின் வேண்டுதலுக்கு இனங்க சுவிஸ் நாட்டில் அமையப்பெற்றுள்ள பேர்ண் முருகன் கோவிலுக்குரிய தங்கரதத்தேரினை எம்மால் திறன்பட செய்து வழங்கியுள்ளோம்.அதன்பிறகு மானிப்பாயில் அமையப்பெற்றுள்ள மருதடிப்பிள்ளையார் கோவிலுக்குரிய கைலாசவாகனமதினை எம்மால் திறன்பட செய்து வழங்கியுள்ளோம். எழுவைதீவில் அமைந்துள்ளது முருகன் கோவிலுக்குரிய சித்திரத்தேரினை இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு ஆவணி மாதம் பத்தொன்பதாம் திகதி அன்று எம்மால் கையளிக்கப்பட்டது. தற்பொழுது அளவெட்டி அழகோலைப்பிள்ளையார் கோவிலுக்குரிய தேர் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கண்டுள்ளது.அத்துடன் பன்னாலையில் அமையப்பெற்றுள்ள முருகன் கோவிலுக்குரிய சித்திரத்தேருக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாது எமது கிழக்கு மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள வெருகலம் முருகன் கோவிலுக்குரிய சித்திரத்தேரின் திருப்பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.